ஊரடங்கால் வேலையின்றி தவிக்கும் சுயஉதவிக்குழு பெண்களுக்கு ரூ.16 லட்சம் கடன் உதவி அமைச்சர் வழங்கினார்


ஊரடங்கால் வேலையின்றி தவிக்கும் சுயஉதவிக்குழு பெண்களுக்கு ரூ.16 லட்சம் கடன் உதவி அமைச்சர் வழங்கினார்
x
தினத்தந்தி 1 May 2020 10:16 AM IST (Updated: 1 May 2020 10:16 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கால் வேலை யின்றி தவிக்கும் சுய உதவிக்குழு பெண்களுக்கு ரூ.16 லட்சம் கொரோனா கடன் உதவியை அமைச்சர் கந்தசாமி வழங்கினார்.

பாகூர்,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அனைத்து வகையான தொழிலாளர்களும் வேலை யின்றி பாதிக்கப்பட்டு உள்ளனர். கிராமப்புற ஏழை குடும்பங்களை பாதுகாத்திட புதுச்சேரி மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த வர்களுக்கு கொரோனா சிறப்பு கடன் வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி கடன் உதவி வழங்குவதற்கான தொடக்க நிகழ்ச்சி ஏம்பலம் தொகுதி சேலியமேடு இந்தியன் வங்கி கிளையில் நடைபெற்றது. மாநில ஊரக வாழ்வாதார திட்ட இணைப்பு அதிகாரி லட்சுமணன் தலைமை தாங்கினார். அரியாங்குப்பம் இணை வட்டார வளர்ச்சி அதிகாரி கதிர்வேல், இந்தியன் வங்கி கிளை மேலாளர் ஹரிஹரசுதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ரூ.16 லட்சம் கடன் உதவி

அமைச்சர் கந்தசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, சுய உதவிக்குழு பெண்களுக்கு கடன் உதவி யாக ரூ.10 ஆயிரத்துக்கான காசோலைகளை வழங்கினார். இதில் சேலியமேடு கிராம பஞ்சாயத்து பகுதியில் உள்ள 13 சுயஉதவி குழுக்களை சேர்ந்த 160 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.16 லட்சம் கடன் உதவி வழங்கப் பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரசு அலுவலர்கள், வங்கி ஊழியர் கள், மகளிர் சுய உதவிக்குழு வினர் சமூக இடைவெளியை கடைபிடித்தனர்.

இதேபோல் அனைத்து கிராம பஞ்சாயத்தில் உள்ள தேசிய வங்கிகள் மூலம் கடன் வழங்க ஏற்பாடு செய்து உள்ள தாக அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

Next Story