ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் இன்று முதல் வழங்கப்படுகிறது - கலெக்டர் தகவல்
ரேஷன்கடைகளில் பொருட்கள் வழங்கும் நாள், நேரம் போன்ற விவரம் குறித்த டோக்கன்கள் இன்று முதல் வீடு வீடாக வழங்கப்படும் என்று கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை,
இதுகுறித்து கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- முதல்-அமைச்சர் அறிவிப்பின்படி அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் இந்த மாதத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான அரிசி, கோதுமை, துவரம் பருப்பு, சர்க்கரை மற்றும் பாமாயில் ஆகியவை கார்டுதாரர்களின் உரிம அளவின்படி விலையில்லாமல் ரேஷன்கடைகள் மூலம் 4.5.2020 முதல் வினியோகம் செய்யப்பட உள்ளது.
மேலும் அத்தியாவசிய பொருட்களோடு முன்னுரிமை, முன்னுரிமையற்ற மற்றும் பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டுகளில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் கூடுதலாக 5 கிலோ அரிசி வினியோகம் செய்யப்பட உள்ளது.
எனவே ரேஷன் கார்டுதாரர்கள், பொருட்களை பெற ஏதுவாக, பொருட்கள் வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடப்பட்டு டோக்கன்கள் இன்று (சனிக்கிழமை) மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வீடுகள் தோறும் சென்று ரேஷன்கடை பணியாளர்களால் வழங்கப்பட உள்ளது.
இந்த டோக்கனில் குறிப்பிடப்படும் நாள் மற்றும் நேரத்தில் ரேஷன்கடைக்கு சென்று ரேஷன்கார்டுதாரர்கள் பொருட்களை பெற்று கொள்ளலாம். பொருட்களை வாங்க வரும் போது, ரேஷன்கார்டுதாரர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும், வரிசையில் ஒரு மீட்டருக்கு குறையாமல் சமூக இடைவெளியை பின்பற்றி நின்று வாங்கி செல்ல வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story