மராட்டியத்தில் 83 சதவீதம் பேர் எந்த அறிகுறியும் இல்லாமல் கொரோனாவுக்கு பாதிப்பு - மந்திரி ராஜேஷ் தோபே தகவல்
மராட்டியத்தில் 83 சதவீதம் பேர் எந்த அறிகுறியும் இல்லாமல் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு இருப்பதாக மந்திரி ராஜேஷ் தோபே தெரிவித்தார்.
மும்பை,
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 506 ஆக உயர்ந்து உள்ளது. இந்தநிலையில், மராட்டிய மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மராட்டியத்தில் கொரோனா வைரசுக்கு ஆளானவர்கள் 83 சதவீதம் பேர் அந்த நோய் அறிகுறி தெரியாமலே பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்படும் வரை அவர்கள் சகஜ நிலையிலேயே இருந்தவர்கள்.
20 சதவீதம் பேர் குணமடைந்தனர்
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 20 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா இறப்பு விகிதம் மாநிலத்தில் 3.5 சதவீதமாக குறைந்துள்ளது.
மராட்டியத்தில் 36 மாவட்டங்களில் 14 மாவட்டங்கள் அதிகளவில் நோய் தொற்று பரவலை குறிக்கும் சிவப்பு மண்டலத்தில் உள்ளன. ஆரஞ்சு மண்டலத்தில் 16 மாவட்டங்களும், பசுமை மண்டலத்தில் 6 மாவட்டங்களும் உள்ளன. மாநிலம் முழுவதும் தற்போது 733 கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story