வாணியம்பாடியில் பூட்டப்பட்ட போலீஸ் நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது


வாணியம்பாடியில் பூட்டப்பட்ட போலீஸ் நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது
x
தினத்தந்தி 2 May 2020 10:13 AM IST (Updated: 2 May 2020 10:13 AM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடியில் பூட்டப்பட்ட போலீஸ் நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது.

வாணியம்பாடி,

வாணியம்பாடி தாலுகா காவல் நிலைய இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வந்தவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்ததால், கடந்த ஏப்ரல் மாதம் 23-ந்தேதி போலீஸ் நிலையம் முழுவதுமாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பூட்டுப்போட்டு பூட்டப்பட்டது. இதையடுத்து கடந்த 9 நாட்களாகப் பூட்டப்பட்டு இருந்த போலீஸ் நிலையத்தை நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் திறந்து வைத்தார்.

போலீஸ் நிலையத்தின் புதிய இன்ஸ்பெக்டராக கவிதா பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் ஏற்கனவே அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றியவர். தற்போது திறக்கப்பட்டுள்ள போலீஸ் நிலையத்தில் குறைந்த எண்ணிக்கையில் போலீசார் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். போலீஸ் நிலையம் மீண்டும் திறக்கப்பட்டபோது வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பாலகிருஷ்ணன், பிரவீன்குமார், நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story