தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உள்ள கல்லூரி பகுதியில் தீவிர போலீஸ் பாதுகாப்பு


தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உள்ள கல்லூரி பகுதியில் தீவிர போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 2 May 2020 9:42 PM GMT (Updated: 2020-05-03T03:12:55+05:30)

தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உள்ள கல்லூரி பகுதியில் தீவிர போலீஸ் பாதுகாப்பு.

ராமநத்தம்,

தமிழகத்தில் சென்னையில் தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்தவர்களுக்கு அதிகமாக பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, மார்க்கெட் மூடப்பட்டது. அங்கு வேலை செய்தவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி சென்ற வண்ணம் உள்ளனர். அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் திட்டக்குடி, வேப்பூர் பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் தங்களது சொந்த ஊருக்கு வந்துள்ளனர்.

இந்நிலையில், மங்களூர் மருத்துவ அலுவலர் டாக்டர் கலைச்செல்வி தலைமையிலான மருத்துவக்குழு மற்றும் திட்டக்குடி தாசில்தார் செந்தில் வேல் மற்றும் சமூக பாதுகாப்பு தாசில்தார் ரவிச்சந்திரன் தலைமையில் வருவாய்துறையினர் இணைந்து, சென்னையில் இருந்து வந்தவர்களை கண்டறிந்து அவர்களை தொழுதூர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரி வளாகத்தில் தங்க வைத்து, தனிமைப்படுத்தி உள்ளனர். இதில் கடந்த 2-நாட்களில் 255 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 200 பேருக்கு ரத்தமாதிரிகள், உமிழ் நீர் பரிசோதனைக்காக எடுத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் அந்த கல்லூரி அமைந்திருக்கும் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story