செங்கட்டாம்பட்டி ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு சீருடை, நிவாரண பொருட்கள்


செங்கட்டாம்பட்டி ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு சீருடை, நிவாரண பொருட்கள்
x
தினத்தந்தி 3 May 2020 4:36 AM IST (Updated: 3 May 2020 4:36 AM IST)
t-max-icont-min-icon

செங்கட்டாம்பட்டி ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு சீருடை, நிவாரண பொருட்கள்.

பட்டிவீரன்பட்டி,

செங்கட்டாம்பட்டி ஊராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளித்தல், தெருக்கள் மற்றும் சாலைகளை சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே செங்கட்டாம்பட்டியில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களுக்கு இலவச சீருடை மற்றும் அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு செங்கட்டாம்பட்டி ஊராட்சி தலைவர் கோபிகிருஷ்ணன் தலைமை தாங்கி, சீருடை மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார். மேலும் மின்வாரிய தொழிலாளர்களுக்கும் அவர் நிவாரண பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி துணைத்தலைவர் வளர்மதி பாண்டி மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதனைத்தொடர்ந்து செங்கட்டாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அய்யம்பட்டியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இதில் வத்தலக்குண்டு வட்டார வளர்ச்சி அலுவலர் வேதா கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதில் செனார்டு தொண்டு நிறுவன செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, வார்டு உறுப்பினர் மகாலட்சுமி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் சோலைமலை நன்றி கூறினார். 

Next Story