அ.தி.மு.க. சார்பில் சலவை தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள் நத்தம் விசுவநாதன் வழங்கினார்
அ.தி.மு.க. சார்பில் சலவை தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள் நத்தம் விசுவநாதன் வழங்கினார்.
கோபால்பட்டி,
சாணார்பட்டி ஒன்றியத்துக்குட்பட்ட கோபால்பட்டி, சாணார்பட்டி, ஆவிளிபட்டி, அஞ்சுகுளிப்பட்டி, கொசவபட்டி, வீரசின்னம்பட்டி, கம்பிளியம்பட்டி, ராஜக்காபட்டி, சிலுவத்தூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த 400 சலவை தொழிலாளர்களுக்கு, அ.தி.மு.க. சார்பில் தலா 10 கிலோ அரிசி, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. அமைப்பு செயலாளருமான நத்தம் விசுவநாதன் தலைமை தாங்கி, சலவை தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். இதில் நத்தம் ஒன்றியக்குழு தலைவர் கண்ணன், சாணார்பட்டி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ராமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் தொழில் அதிபர் ஆர்.வி.அமர்நாத், சாணார்பட்டி ஒன்றிய நிர்வாகிகள் வி.சுப்பிரமணி, கே.சுப்பிரமணி, செல்வராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள் ரமேஷ்பாபு, ஹரிகரன், கண்ணன், முத்தம்மாள், விண்ணரசி, தீபா பஞ்சவர்ணம், ஊராட்சி மன்ற தலைவர்கள் மணிமாறன், கந்தசாமி, நடராஜன், ஜெயலட்சுமி, எலிசபெத், வெங்கடேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story