அரசின் நிபந்தனைகள் கடைபிடிக்கப்படுகிறதா? தனியார் கம்பெனிகளில் போலீஸ் அதிகாரிகள் திடீர் ஆய்வு


அரசின் நிபந்தனைகள் கடைபிடிக்கப்படுகிறதா? தனியார் கம்பெனிகளில் போலீஸ் அதிகாரிகள் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 3 May 2020 5:28 AM IST (Updated: 3 May 2020 5:28 AM IST)
t-max-icont-min-icon

அரசின் நிபந்தனைகள் கடைபிடிக்கப்படுகிறதா? என்று தனியார் கம்பெனிகளில் போலீஸ் சூப்பிரண்டுகள் திடீர் ஆய்வு செய்தனர்.

பாகூர்,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால், கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கு தொடர்பான சில கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியது.

அதன்படி கிராமப்புறங்களில் உள்ள சில அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிபந்தனைகளுடன், மாவட்ட கலெக்டர் அனுமதிபெற்று இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. புதுவையின் பக்கத்து மாவட்டங்களான விழுப்புரம், கடலூரில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால், அந்த பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் புதுவைக்குள் வர அரசு தடை விதித்துள்ளது. உள்ளூர் தொழிலாளர்கள் மற்றும் இங்கு தங்கியுள்ள வடமாநில தொழிலாளர்களை கொண்டு தொழில் நிறுவனங்களை இயக்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

போலீஸ் சூப்பிரண்டுகள் ஆய்வு

இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு புதுவை மாநிலத்தில் கிருமாம்பாக்கம், தவளக் குப்பம், பாகூர், சேதராப்பட்டு, திருபுவனை பகுதிகளில் உள்ள தனியார் கம்பெனிகள், தொழில்நிறுவனங்கள் இயங்கி வருகின்றது. இந்த கம்பெனிகளில் அரசின் நிபந்தனைகள் முறையாக கடை பிடிக்கப்படுகிறதா? கடலூர், விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்கிறார்களா? என்று வருவாய்த்துறை, போலீஸ் அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு நடத்தி வருகின்றனர்.

அதன்படி கொரோனா ஊரடங்கு பாதுகாப்பு மண்டல அதிகாரி ரச்சனாசிங், தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் ஆகியோர் கிருமாம்பாக்கம், பாகூர், தவளக்குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் கம்பெனிகளில் நேற்று திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

அவர்கள் கிருமாம்பாக்கத்தை அடுத்த கந்தன்பேட் பகுதியில் உள்ள தனியார் பேக்கேஜிங் நிறுவனத்தை பார்வையிட்டனர். வெளியூர்களில் இருந்து வரும் தொழிலாளர்களின் விபரம், சமுக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா? முக கவசம் அணிந்து தொழிலாளர்கள் வேலை செய்கிறார்களா? கைகள் கழுவ கிருமிநாசினி வைக்கப்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்தனர்.

மேலும் தொழிலாளர்களுக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தனியார் கம்பெனி நிர்வாகிகளிடம் விசாரித்தனர். தொழிலாளர்களிடம் கொரோனா குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த ஆய்வின்போது பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் தன்வந்திரி, மனிதவள அதிகாரி ரவிச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story