கோவை மாநகர பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட 344 இருசக்கர வாகனங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு
கோவை மாநகர பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட 344 இருசக்கர வாகனங்கள் உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
கோவை,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த உத்தரவை மீறி காரணம் இல்லாமல் வெளியே செல்பவர்கள் கைது செய்யப்படுவதுடன், அவர்கள் செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி நேற்று ஒரேநாளில் மட்டும் கோவை மாநகர பகுதியில் 79 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 73 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதுபோன்று கோவை புறநகர் பகுதியில் தடையை மீறி வெளியே சென்ற 521 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 421 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவர்களுக்கு ரூ.2 லட்சத்து 5 ஆயிரத்து 900 அபராதம் விதிக்கப்பட்டது.
344 வாகனங்கள் ஒப்படைப்பு
இதற்கிடையே தடையை மீறி வெளியே சென்றவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று கோவை மாநகர பகுதியில் உள்ள காட்டூர் போலீஸ் நிலையம் முன்பு பலர் திரண்டனர். சம்பந்தப்பட்ட நபர்கள் தங்களின் இருசக்கர வாகனங்களின் ஆர்.சி.புத்தகம் மற்றும் ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றை வைத்து இருந்தனர். அவர்கள் அனைவரும் அங்கு சமூக இடைவெளிவிட்டு நின்றிருந்தனர். பின்னர் அவர்கள் வாகனங்களுக்கான சான்றுகளை அங்கிருக்கும் போலீசாரிடம் காண்பித்த பின்னர் அவற்றை வழங்கினார்கள். நேற்று மட்டும் 344 இருசக்கர வாகனங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-
கடும் நடவடிக்கை
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கத்தான் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் அது தெரியாமல் பலர் காரணம் இல்லாமல் வெளியே சுற்றி வருகிறார்கள். இதனால் ஏற்படும் பாதிப்பு குறித்து அவர்கள் உணருவது இல்லை. காரணம் இல்லாமல் வெளியே சுற்றுபவர்கள் கைது செய்யப்படுவதுடன், அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
ஒருவரிடம் இருந்து வாகனம் பறிமுதல் செய்யப்பட்டால் அந்த வாகனம் ஒருவாரம் கழித்து உரிய அபராதம் வசூலித்த பின்னர் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இளைஞர்களிடம் இருந்துதான் அதிகளவில் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. எனவே காரணம் இல்லாமல் வெளியே சுற்றினால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Tags :
Next Story