மும்பை தாராவியில் ஒரே நாளில் 96 பேருக்கு கொரோனா - 2 பேர் பலி


மும்பை தாராவியில் ஒரே நாளில் 96 பேருக்கு கொரோனா - 2 பேர் பலி
x
தினத்தந்தி 4 May 2020 4:30 AM IST (Updated: 4 May 2020 4:30 AM IST)
t-max-icont-min-icon

மும்பை தாராவியில் ஒரே நாளில் 96 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் 2 பேர் பலியாகி உள்ளனர்.

மும்பை, 

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் காட்டு தீ போல பரவி வருகிறது. 

மருத்துவ பணியாளர்கள் வீடு, வீடாக சென்று பரிசோதனை செய்த போதும் கூட இங்கு நோய் தொற்று அசுர வேகத்தில் பரவி வருகிறது. இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் தாராவியில் 96 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக மாட்டுங்கா லேபர் கேம்ப் பகுதியில் 11 பேருக்கும், வால்மீகி நகரில் 10 பேருக்கும், கிராஸ் ரோட்டில் 7 பேருக்கும், 90 அடி ரோட்டில் 6 பேருக்கும், இந்திரா நகரில் 7 பேருக்கும் நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 590 ஆக உயர்ந்து உள்ளது.

20 பேர் பலி

இதேபோல இங்கு நோய் தொற்றுக்கு மேலும் 2 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்து உள்ளது.

மக்கள் அடர்த்தி மிகுந்த தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருவது அரசுக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

இதேபோல அங்கு வசிக்கும் மக்கள் இடையேயும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story