தி.மு.க. சார்பில் சலவை தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள் எம்.எல்.ஏ. வழங்கினார்


தி.மு.க. சார்பில் சலவை தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள் எம்.எல்.ஏ. வழங்கினார்
x
தினத்தந்தி 4 May 2020 4:55 AM IST (Updated: 4 May 2020 4:55 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. சார்பில் சலவை தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள் ஆண்டி அம்பலம் எம்.எல்.ஏ. வழங்கினார்.

கோபால்பட்டி,

சாணார்பட்டி ஒன்றியம் சிலுவத்தூரில் தி.மு.க. சார்பில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலையின்றி தவித்து வரும் 200 சலவை தொழிலாளர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு நத்தம் எம்.எல்.ஏ. ஆண்டி அம்பலம் தலைமை தாங்கி, சலவை தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சாணார்பட்டி தெற்கு மாவட்ட கவுன்சிலர் விஜயன் முன்னிலை வகித்தார். இதில் சாணார்பட்டி ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் தர்மராஜன், மோகன், வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் வேணுகோபால், மாவட்ட கவுன்சிலர் லலிதா, சாணார்பட்டி ஒன்றியக்குழு தலைவர் பழனியம்மாள், துணைத்தலைவர் ராமதாஸ், சிலுவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர் முத்துலட்சுமி மற்றும் தி.மு.க. ஒன்றிய, ஊராட்சி, கிளை நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இதேபோல் தி.மு.க. சார்பில் சாணார்பட்டி ஒன்றியத்தை சேர்ந்த 500 சலவை தொழிலாளர்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story