கேரளாவில் தவிக்கும் ராமநாதபுரம் மீனவர்கள் - உடனடியாக மீட்க கலெக்டரிடம் மனு


கேரளாவில் தவிக்கும் ராமநாதபுரம் மீனவர்கள் - உடனடியாக மீட்க கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 5 May 2020 4:45 AM IST (Updated: 5 May 2020 2:37 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் அவதிப்பட்டுவரும் ராமநாதபுரம் மீனவர்களை உடனடியாக மீட்டு சொந்த ஊருக்கு கொண்டுவர வேண்டும்

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளம் அகில இந்திய மறவர் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் மீனவர்களின் குடும்பத்தினர் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் வந்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- 

ராமநாதபுரம் மாவட்டம் நாகாச்சி, பிள்ளைமடம் கிராமங்களை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் கேரள மாநிலம் கண்ணூர் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றிருந்தனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதன்காரணமாக கேரளாவில் இருந்து இந்த மீனவர்கள் சொந்த ஊருக்கு வரமுடியாமல் போய்விட்டது. இவ்வாறு மீன்பிடிக்கும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 52 மீனவர்கள் சொந்த ஊருக்கு வர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். 

கடந்த 40 நாட்களாக வேலைக்கும் செல்ல முடியாமல் குடும்பத்தினரை பார்க்க முடியாமல் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். எனவே கேரளாவில் அவதிப்பட்டுவரும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்களை உடனடியாக மீட்டு சொந்த ஊருக்கு கொண்டுவர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து இணையதளத்தில் பதிவு செய்தால் அரசின் வழிகாட்டுதலை பெற்று மீட்க நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார்.

Next Story