நெய்வேலியில் வெளிமாநில தொழிலாளர்களுக்கு நிவாரணம் தொழிலாளர் நல உதவி ஆணையர் வழங்கினார்


நெய்வேலியில் வெளிமாநில தொழிலாளர்களுக்கு நிவாரணம் தொழிலாளர் நல உதவி ஆணையர் வழங்கினார்
x
தினத்தந்தி 5 May 2020 3:08 AM IST (Updated: 5 May 2020 3:08 AM IST)
t-max-icont-min-icon

நெய்வேலியில் வெளிமாநில தொழிலாளர்களுக்கு நிவாரணம் தொழிலாளர் நல உதவி ஆணையர் வழங்கினார்.

நெய்வேலி,

நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இதனால் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலை பார்த்து வந்த வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மத்திய தொழிலாளர் நல ஆணையத்தின் சார்பில் அவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கும்பகோணம்-சென்னை சாலையில் உள்ள வடக்குத்து நவீன அரிசி ஆலையில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு கடலூர் தொழிலாளர் நல உதவி ஆணையர் கணேசன் கலந்து கொண்டு 1500-க்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்களுக்கு தலா 15 கிலோ அரிசி, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய், மளிகை பொருட்கள் உள்பட பல்வேறு நிவாரண பொருட்களை வழங்கினார். இதில் என்.எல்.சி. மனிதவளத்துறை மேலாளர்கள் கருணாமூர்த்தி, சத்தியதேவன், உதவி தொழிலாளர் நல ஆணையர் அலுவலக அதிகாரி பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story