கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காலையில் திறக்கப்பட்ட கடைகள் மதியம் அடைக்கப்பட்டதால் பரபரப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காலையில் திறக்கப்பட்ட கடைகள், மதியம் அடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி,
உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், சில தளர்வுகளை அரசு அறிவித்தது. ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் மளிகை கடைகள், காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் எலக்ட்ரிக்கல், ஹார்டுவேர், சிமெண்டு, கட்டுமான பொருட்கள், செல்போன், கம்ப்யூட்டர், வீட்டு உபயோக பொருட்கள், மின்மோட்டார், கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்குதல் உள்ளிட்ட தனிக்கடைகள் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டது.
போக்குவரத்து நெரிசல்
இதையடுத்து கள்ளக்குறிச்சி நகரில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பூட்டிக்கிடந்த கடைகள் நேற்று காலை திறக்கப்பட்டன. இதனால் முக்கிய சாலைகளில் பொருட்கள் வாங்க கூட்டம் அலைமோதியது. மேலும் ஒரே நேரத்தில் பொதுமக்கள் வாகனங்களில் திரண்டு வந்ததால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் ஊரடங்கு முற்றிலும் தளர்வு செய்யப்பட்டதுபோல் நகரம் காட்சி அளித்தது. இதை பார்த்த போலீசார், போக்குவரத்து நெரிசலை சரிசெய்து வாகனங்களை நான்குமுனை சந்திப்பு கைகாட்டி சிக்னல் வழியாக அனுப்பி வைத்தனர்.
கடைகள் அடைப்பு
இதற்கிடையே மாவட்ட கலெக்டர் கிரண்குராலா, போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் ஆகியோர் மதியம் கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பு,துருகம் சாலை, சேலம் மெயின் ரோடு, காந்தி ரோடு ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தனர். அப்போது பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் திரண்டு நின்றதால் அங்குள்ள கடைகளை அடைக்குமாறு கலெக்டர் கூறினார். இதனால் காலையில் திறக்கப்பட்ட கடைகள், மதியம் அடைக்கப்பட்டன.
அப்போது சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த், துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன், இன்ஸ்பெக்டர் விஜயகுமார், நகராட்சி ஆணையர் வெங்கடாசலம் ஆகியோர் உடனிருந்தனர். கள்ளக்குறிச்சி நகரில் கடைகள் காலையில் திறக்கப்பட்டு மதியம் அடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம்
உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களுக்கு ஊரடங்கில் தளர்வு கிடையாது என தாசில்தார் காதர் அலி அறிவித்தார். அதனால் திருநாவலூர் ஒன்றியம் சேந்தநாடு, களமருதூர், கெடிலம், மடப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகளை தவிர, மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. ஊரடங்கு தளர்வு படி சங்கராபுரம் நகரில் உள்ள கடைகள் அனைத்தும் நேற்று காலை வழக்கம்போல் திறக்கப்பட்டன. அப்போது அங்குள்ள ஒரு செல்போன் கடையில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் வாடிக்கையாளர்கள் நின்று கொண்டிருந்தனர். இதை பார்த்த தனி தாசில்தார் வாசுதேவன், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், அனைவரும் முக கவசம் அணியவேண்டும் என்றும் அங்கிருந்தவர்களை அறிவுறுத்தி சென்றார்.

Related Tags :
Next Story