ஒரேநாளில் 15 பேருக்கு கொரோனா: பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை - கலெக்டர் மெகராஜ் அறிவுரை

ஒரேநாளில் 15 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என்று கலெக்டர் மெகராஜ் அறிவுரை கூறியுள்ளார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 61 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக கலெக்டர் மெகராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட 15 பேரில் 6 பேர் லாரி டிரைவர்கள். 4 பேர் லாரிகளில் சென்று வந்த பணியாளர்கள். இதனால் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை. அதே நேரத்தில் அலட்சியமும் கூடாது. இதுபோன்ற திடீர் நிகழ்வுகளுக்கு மாவட்ட நிர்வாகம் தயாராகவே உள்ளது. கொரோனா நோய் தொற்று ஏற்படாமல் இருக்க டிரைவர்கள் மற்றும் பணியாளர்கள் அரசு தெரிவித்துள்ள நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story