கடலூர் மாவட்டத்தில் தொழிலாளர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரண உதவி


கடலூர் மாவட்டத்தில் தொழிலாளர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரண உதவி
x
தினத்தந்தி 6 May 2020 3:05 AM IST (Updated: 6 May 2020 3:05 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் தொழிலாளர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.

புதுப்பேட்டை,

பண்ருட்டி அருகே தொரப்பாடி பேரூராட்சியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் எம்.சி.சம்பத், கடலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆகியோர் அறிவுறுத்தலின்பேரில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு நகர செயலாளர் கனகராஜ் தலைமை தாங்கினார். இதில் பேரூராட்சி செயல் அலுவலர் அருள்குமார் கலந்து கொண்டு 12-வது வார்டு பகுதியை சேர்ந்த 250 குடும்பத்திற்கு அரிசி, காய்கறி, கீரை வகைகள் ஆகியவற்றை நிவாரணமாக வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் வார்டு கவுன்சிலர் மரகதம், வார்டு செயலாளர்கள் சண்முகம், ராமு, ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் பழனிசாமி, மாவட்ட பிரதிநிதி கலைக்குமரன், சரவணன், வெங்கடேசன், நமச்சிவாயம் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி பண்ருட்டியில் நடந்தது. இதில் நகர நிர்வாகிகள் ராமலிங்கம் விலாஸ் மோகன், ஏ.ஆர்.ஆர். அரிசி மண்டி டி.ரகு ஆகியோர் கலந்து கொண்டு 50 பேருக்கு அரிசி, மளிகை, காய்கறிகள் ஆகியவற்றை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தி.மு.க.

பண்ருட்டியில் முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்க நிர்வாகிகள் ராமமூர்த்தி, வெங்கடேசன், சேகர், சரவணன், ராஜா, மாணிக்கம், மூர்த்தி ஆகியோர் முன்னிலையில் பண்ருட்டி குணா குரூப்ஸ் உரிமையாளரும், முன்னாள் தி.மு.க. இளைஞரணியை சேர்ந்தவருமான பி.குணா முடிதிருத்தும் தொழிலாளர்கள் 50 பேருக்கு அரிசி, மளிகை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். இதில் சகுந்தலா குணா, டாக்டர் ஷாம் குணா, பிரபு, ஒப்பந்ததாரர் ராஜா, கிருஷ்ணா சைக்கிள் தம்பி என்கிற கலியபெருமாள், தமிழ்நாடு ரவி, அருணாசலம், புல்லட் புருஷோத்தமன், பன்னீர், முன்னாள் கவுன்சிலர் பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காட்டுமன்னார்கோவிலில் தி.மு.க. சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி ரூ.5 லட்சம் மதிப்பில் 1300 தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். இதில் ஒன்றிய செயலாளர் முத்துசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமலிங்கம், அவைத் தலைவர் கருணாநிதி, நகர செயலாளர் கணேசமூர்த்தி, நிர்வாகிகள் பாஸ்கர், சுப்பிரமணியன், பால மணிகண்டன், செந்தில், ராஜசேகர், நிஜார், சொர்ணம், அறிவழகன், முத்தமிழ் மோட்டார் தொழிலாளர் நலச்சங்க தலைவர் சீனிவாசன், ஒன்றிய இளைஞரணி நிர்வாகிகள் விஜயராகவன், அருண், நகர இளைஞரணி கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நெய்வேலி

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் நெய்வேலி நகர வட்டம் 30-ல் நடந்த நிகழ்ச்சியில் சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்த 60 பேர் மற்றும் கூலி தொழிலாளர்கள் 200 பேருக்கு அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார். நிகழ்ச்சியில் பண்ருட்டி ஒன்றியக்குழு தலைவர் சபா.பாலமுருகன், நகர பொறுப்பு குழு தலைவர் பக்கிரிசாமி, தொ.மு.ச. தலைவர் வீர ராமச்சந்திரன், பொதுச்செயலாளர் சுகுமார், பொருளாளர் குருநாதன், முன்னாள் நகர செயலாளர் புகழேந்தி, பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், நன்மாறபாண்டியன், இளங்கோ, செந்தில்குமார், ராம கருப்பன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜேஷ், மாவட்ட பொறியாளரணி கார்த்திகேயன், தகவல் தொழில்நுட்ப அணி சார்லஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நெய்வேலி அருகே பெருமாத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 60 மாணவி, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் ஆசிரியர்கள் சார்பில் மாணவர்களின் குடும்பத்திற்கு தலா 10 கிலோ அரிசி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி, ஆசிரியர்கள் கல்பனா, சசிகுமார், சமூக ஆர்வலர் நெடுஞ்செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றியம் கூடலையாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் இருதயராஜ், உதவி ஆசிரியர்கள் வேலாயுதம் முருகேசன், ராஜசேகர், ரவி, சிவமுருகன் ஆகியோர் பள்ளியில் பயின்று வரும் 75 மாணவர்களுக்கு தலா 5 கிலோ அரிசி, மளிகை பொருட்கள் ஆகியவற்றை வீடு, வீடாக சென்று வழங்கினர். மேலும் 4 துப்புரவு பணியாளர்களுக்கும் நிவாரண பொருட்களை வழங்கி சமூக நல்லிணக்க உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ஜீவா, ஆசை தம்பி, துணை தலைவர் திருசங்கு, கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன், கிராம செயலாளர் தியாகராஜன், கிருஷ்ணராஜ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புவனகிரி

மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றியம் கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள், அலுவலக பணியாளர்களுக்கு அரிசி, காய்கறிகள், மளிகை பொருட்கள் ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் இளவரசி நாகராஜன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன், இந்திராதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றியக்குழு தலைவர் சிவப்பிரகாசம் கலந்து கொண்டு துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள், அலுவலக பணியாளர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் ஆகியவற்றை வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சிவகுருநாதன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பழனிவேல், சரஸ்வதி, விஜயா, சகுந்தலா, சங்கர், கலைச்செல்வன், இந்திராணி, கோமதி, ஊராட்சி மன்ற துணை தலைவர் அமுதா, ராஜசேகரன் , முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கிருபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சந்திரசேகரன் நன்றி கூறினார்.

ராமநத்தம்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி, கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன் எம்.எல்.ஏ. வழிகாட்டுதலின் படி ராமநத்தம், தொழுதூர் ஊராட்சியில் பணியாற்றி வரும் துப்புரவு பணியாளர்கள், டேங்க் ஆபரேட்டர்களுக்கு அரிசி, காய்கறிகள் ஆகியவற்றை மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் செல்வி அமிர்தலிங்கம் வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராமு, ஒன்றிய விவசாய அணி துணை அமைப்பாளர் மகேந்திரன், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் தங்க சாமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story