உளுந்தூர்பேட்டை அருகே 2 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்


உளுந்தூர்பேட்டை அருகே 2 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்
x
தினத்தந்தி 6 May 2020 3:34 AM IST (Updated: 6 May 2020 3:34 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே 2 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் குமரகுரு எம்.எல்.ஏ. வழங்கினார்.

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள இருந்தை மற்றும் பெரியமாறனோடை கிராமத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பலர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த கிராமம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளதால், அந்த கிராமத்தில் இருந்து யாரும் வெளியே செல்லாத வகையில் சீல் வைக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த கிராம மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த குமரகுரு எம்.எல்.ஏ. தனது சொந்த செலவில் 2 ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி மற்றும் மளிகை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயக்குமார், கண்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜி ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story