நெய்க்காரப்பட்டியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை திறக்கக்கோரி பொதுமக்கள் போராட்டம்
நெய்க்காரப்பட்டியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை திறக்கக்கோரி பொதுமக்கள் போராட்டம்.
நெய்க்காரப்பட்டி,
பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டது. பின்னர் பாதிக்கப்பட்டவர் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அதே பகுதியில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. எனவே தனிமைப்படுத்தப்படும் நாட்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகப்படுத்தப்பட்டது. தற்போது கொரோனா பாதிக்கப்பட்ட நபர் சிகிச்சை முடிந்து நாளை வீடு திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் தனிமைப்படுத்தப்பட பகுதியை திறக்க கோரி அப்பகுதி மக்கள் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கடந்த 40 நாட்களுக்கும் மேலாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் அடைக்கப்பட்டுள்ளதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், போதிய அளவில் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில்லை எனவும் குற்றம் சாட்டினர்.
இதனைத்தொடர்ந்து தகவலறிந்து வந்த பழனி சப்-கலெக்டர் உமா, போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன், சுகாதார பணிகள் உதவி இயக்குனர் ஜெயந்தி, தாசில்தார் பழனிசாமி, பேரூராட்சி செயல் அலுவலர் தாமரை உள்ளிட்ட அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்குள் வசிப்பவர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் எளிதாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதையடுத்து பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story