மாவட்ட செய்திகள்

கோரிமேடு எல்லையில் புதுச்சேரிக்குள் நுழைய முயன்றவர்களை விரட்டியடித்த போலீசார் + "||" + Police chased away those who tried to enter Porchery on the Korimedu border

கோரிமேடு எல்லையில் புதுச்சேரிக்குள் நுழைய முயன்றவர்களை விரட்டியடித்த போலீசார்

கோரிமேடு எல்லையில் புதுச்சேரிக்குள் நுழைய முயன்றவர்களை விரட்டியடித்த போலீசார்
கோரிமேடு எல்லையில் புதுச்சேரிக்குள் நுழைய முயன்றவர்களை போலீசார் விரட்டியடித்தனர்.
புதுச்சேரி,

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. புதுவை பகுதிக்குள் தமிழக மக்கள் நுழைவதை தடுக்க கோரிமேடு, முள்ளோடை, மதகடிப்பட்டு, கனகசெட்டிக்குளம் ஆகிய எல்லைப்பகுதிகள் சீல் வைக்கப்பட்டு உள்ளன


கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் உள்ளதால் தற்போது புதுவை எல்லைக்குள் நுழைபவர்களை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவசர சிகிச்சைக்கு வருவோர், பணிக்கு வரும் அரசு ஊழியர்கள் மட்டுமே புதுவைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

விரட்டியடிப்பு

இந்த நிலையில் பல்வேறு காரணங்களை கூறி புதுவைக்குள் நுழைபவர்களை தடுக்க எல்லைப்பகுதியில் தற்போது அதிக அளவில் போலீசாரும் குவிக்கப்பட்டு உள்ளனர். நேற்று காலை கோரிமேடு எல்லைப்பகுதி வழியாக தமிழகத்தை சேர்ந்தவர்கள் பல்வேறு காரணங்களை கூறி புதுவைக்குள் நுழைய முயன்றனர்.

இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உரிய காரணங்கள் இன்றி புதுவைக்குள் நுழைய முயன்றவர்களை லத்தியை சுழற்றி விரட்டி அடித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தொடர்புடைய செய்திகள்

1. நுரையீரல் தொற்றால் தொழிலாளி சாவு:போச்சம்பள்ளி தனியார் மருத்துவமனை பகுதி ‘சீல்’ வைப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள உப்பாரப்பட்டியை சேர்ந்தவர் 48 வயது தொழிலாளி. உடல் நலக்குறைவு காரணமாக அவர் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று கொண்டு வரப்பட்டார்.
2. டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகளை விற்ற 9 கடைகளுக்கு ‘சீல்’
சேலம் சரகத்தில் டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகளை விற்ற 9 கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
3. குஜராத், மராட்டியத்தில் இருந்து திருக்கோவிலூர் திரும்பிய 28 பேர் தனிமைப்படுத்தும் மையத்தில் தங்க வைப்பு
குஜராத், மராட்டியத்தில் இருந்து திருக்கோவிலூர் திரும்பிய 28 பேர் தனிமைப்படுத்தும் மையத்தில் தங்க வைப்பு.
4. 2 நாட்களில் ரூ.10½ கோடிக்கு மது விற்பனை: ஐகோர்ட்டு உத்தரவின்படி டாஸ்மாக் கடைகள் பூட்டி ‘சீல்’ வைப்பு
விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களில் ரூ.10½ கோடிக்கு மதுபானங்கள் விற்பனையான நிலையில் ஐகோர்ட்டு உத்தரவின்படி டாஸ்மாக் கடைகள் நேற்று பூட்டி சீல் வைக்கப்பட்டது. அந்த கடைகள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
5. ஏலகிரி மலையில் மர்மநபர்கள் தீ வைப்பு
ஏலகிரி மலையில் மர்மநபர்கள் தீ வைப்பு.