கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடிய 13 பேர் கைது


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடிய 13 பேர் கைது
x
தினத்தந்தி 7 May 2020 4:30 AM IST (Updated: 7 May 2020 1:37 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடிய 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுநாதன் மற்றும் போலீசார் கிறிஸ்துபாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பணம் வைத்து சூதாடிய விஜயகுமார் (வயது42), நாகராஜ் (54), அண்ணாதுரை (44), ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து ரூ.300-ஐ பறிமுதல் செய்தனர்.

அதே போல் கெலமங்கலம் போலீசார் குந்துமாரணப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பணம் வைத்து சூதாடிய தேவராஜ் (38), கிருஷ்ணமூர்த்தி (40), கனகராஜ் (37), சீனிவாசன் (33), வெங்கடேஷ் (39), பேட்டராயன் (35) ஆனந்த் (39) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,330 பறிமுதல் செய்யப்பட்டது.

ஊத்தங்கரை பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது லக்கம்பட்டி பகுதியில் பணம் வைத்து சூதாடிய ஜோதிபாஸ் (30), வினோத்குமார் (28), ராமசாமி (52) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story