மாவட்ட செய்திகள்

புதுச்சத்திரம் பகுதியில் கொரோனா பாதித்த 5 கிராமங்களுக்கு ‘சீல்’ + "||" + Five villages in the Puduchathiram area affected by corona

புதுச்சத்திரம் பகுதியில் கொரோனா பாதித்த 5 கிராமங்களுக்கு ‘சீல்’

புதுச்சத்திரம் பகுதியில் கொரோனா பாதித்த 5 கிராமங்களுக்கு ‘சீல்’
புதுச்சத்திரம் பகுதியில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட 5 கிராமங்களுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்து உள்ளனர்.
நாமக்கல், 

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதில் புதுச்சத்திரம் அருகே உள்ள லக்கியம்பட்டியை சேர்ந்தவர் கள் 4 பேருக்கு உறுதி செய்யப்பட்டது. இதேபோல் இந்த பகுதியில் காரைக் குறிச்சிபுதூர், ரெட்டிப்புதூர், கலங்காணி பகுதிகளில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் நாமகிரிப்பேட்டை அருகே மோளபள்ளிப்பட்டி பாலிக்காடு பகுதியை சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் பாதிக்கப்பட்டு இருந்தார். இவர் பிரசவத்திற்காக புதுச் சத்திரம் அருகே உள்ள குருசாமிபாளையத்தில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு வந்து இருந்தார். எனவே லக்கியம் பட்டி, காரைக் குறிச்சிபுதூர், ரெட்டிப்புதூர், கலங்காணி, குருசாமி பாளையம் என 5 கிராமங்களுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்து உள்ளனர்.

அப்பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன. அங்கு வெளிநபர்களை அனுமதிப்பது இல்லை. இதேபோல் அங்கு வசிப்பவர்களும் வெளியே வர அனுமதி இல்லை. அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அதிகாரிகள் தன்னார்வலர்கள் மூலம் வழங்கி வருகின்றனர்.

இவை அனைத்தும் கிராமபுற பகுதி என்பதால் அண்டை கிராமங்களில் வசிப்பவர்கள் பீதி அடைந்து உள்ளனர். இவர்களில் சில கிராமத்தினர் தாங்களாகவே முன்வந்து தங்களது கிராமத்திற்கு செல்லும் சாலை களை அடைத்து கொண்டனர். சில இடங்களில் கிராமத்தின் முகப்பில் வேப்பிலை கட்டி தொங்கவிட்டு இருப்பதையும் பார்க்க முடிகிறது.