12 ஆயிரம் குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கொடியசைத்து அனுப்பி வைத்தார்


12 ஆயிரம் குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கொடியசைத்து அனுப்பி வைத்தார்
x
தினத்தந்தி 8 May 2020 11:30 PM GMT (Updated: 8 May 2020 8:19 PM GMT)

அ.தி.மு.க. சார்பில் 2 ஆயிரம் குடும்பங்களுக்கு உணவு பொருட்களை, அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

அனுப்பர்பாளையம், 

திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருப்பூர் வடக்கு தொகுதிக்குட்பட்ட மாநகர பகுதிகளில் வசிக்கும் 12 ஆயிரம் ஏழை குடும்பத்தினருக்கு முன்னாள் அமைச்சரும், மாநகர் மாவட்ட செயலாளருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில், வடக்கு தொகுதி கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. முன்னிலையில் உணவு பொருட்கள் ஏராளமான வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டது. இதை தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கொடியசைத்து அனுப்பிவைத்தார்.

இதன்படி ரூ.80 லட்சம் மதிப்புள்ள அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட உணவு பொருட்கள் பகுதி மற்றும் வார்டுகள் வாரியாக அனுப்பிவைக்கப்பட்டது.

இதில் முன்னாள் மண்டல தலைவர்கள் ராதாகிருஷ்ணன் ஜான், பகுதி செயலாளர்கள் கருணாகரன், கணேஷ், பட்டுலிங்கம், 15 வேலம்பாளையம் கூட்டுறவு சங்க தலைவர் வி.கே.பி. மணி, முன்னாள் கவுன்சிலர்கள் திலகர்நகர் சுப்பு, சின்னசாமி, கோட்டா பாலு, பாலசுப்பிரமணியம், செந்தில்குமார், ஈஸ்வரன், அ.தி.மு.க. நிர்வாகிகள் ஈஸ்வரன், நீதிராஜன், தங்கராஜ், ராஜூ, பழனிவேலு, சவுந்தர்ராஜன், அனுப்பர்பாளையம் பாத்திர சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story