ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.8 கோடியே 67 லட்சத்துக்கு மது விற்பனை


ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.8 கோடியே 67 லட்சத்துக்கு மது விற்பனை
x
தினத்தந்தி 8 May 2020 10:45 PM GMT (Updated: 2020-05-09T02:12:41+05:30)

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.8 கோடியே 67 லட்சத்துக்கு மது விற்பனையானது.

ஈரோடு, 

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. மாவட்டத்தில் உள்ள 203 மதுக்கடைகளில் நேற்று முன்தினம் 143 கடைகள் திறக்கப்பட்டன. இந்த கடைகளில் குடிமகன்கள் ஏராளமானவர்கள் வந்து மதுபாட்டில்களை வாங்கிச்சென்றனர்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் இளங்கோ கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் 143 கடைகள் மூலம் முதல் நாளில் (அதாவது நேற்று முன்தினம்) மது விற்பனை நடந்தது. இந்த ஒரே நாளில் ரூ.8 கோடியே 67 லட்சத்து 34 ஆயிரத்து 870-க்கு மது விற்பனை நடந்து உள்ளது. முதல் நாளில் செயல்பட்ட 3 கடைகளில் குடிமகன்கள் நெரிசல் இன்றி நிற்க போதிய வசதிகள் இல்லாததால் அடைக்கப்பட்டு உள்ளன.

அதன்படி ஈரோடு டவுன் பகுதியில் அகில்மேடு வீதி, எஸ்.கே.சி. ரோடு கடைகளும், வேலம்பாளையம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையும் அடைக்கப்பட்டது. அதற்கு பதிலாக அந்தியூர், ஆப்பக்கூடல் மற்றும் ஈரோடு அசோகபுரம் கடைகள் திறக்கப்பட்டு உள்ளன.

தற்போதைய நிலவரப்படி 143 கடைகள் இயங்கி வருகின்றன. முதல் நாளிலேயே ஏராளமானவர்கள் தங்களுக்கு தேவையான அளவு மது பாட்டில்கள் வாங்கிச்சென்று விட்டதால் 2-வது நாளில் கூட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது என்று அவர் கூறினார்.

டாஸ்மாக் மாவட்ட மேலாளர் இளங்கோ திருநகர் காலனி உள்பட ஈரோடு டவுன் பகுதியில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் நேற்று ஆய்வு செய்தார்.


Next Story