கோவாவில் சிக்கித்தவித்த 54 பேர் சொந்த ஊருக்கு திரும்பினர்
கோவாவில் சிக்கித்தவித்த 54 பேர் சொந்த ஊருக்கு திரும்பினர்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே உள்ள அரும்பராம்பட்டு, சிவானூர், ஆற்கவாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த சுமார் 200 பேர் கோவாவில் தங்கியிருந்து மீன்பிடி தொழில் மற்றும் பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், அவர்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்தனர். இதனால் அவர்களை சொந்த ஊருக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கும்படி வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் கிரண்குராலாவுக்கு கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ.வின் தொடர் முயற்சியால், முதற்கட்டமாக 54 பேர் 2 பஸ்களில் கோவாவில் இருந்து நேற்று முன்தினம் இரவு சொந்த ஊருக்கு திரும்பி வந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லையான மூங்கில்துறைப்பட்டுக்கு வந்த போது, அவர்களை வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. வரவேற்று, அனைவருக்கும் உணவு வழங்கினார். தொடர்ந்து சுகாதாரத்துறையினர் பஸ்களில் வந்த 54 பேருக்கும் ரத்த மாதிரி எடுத்து, பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே கோவாவில் சிக்கி தவிக்கும் மீதமுள்ள தொழிலாளர்களையும் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. கூறினார்.

Related Tags :
Next Story