காஞ்சீபுரம் மாவட்டத்தில் 14 ஆயிரத்து 145 பேருக்கு கொரோனா நிவாரண பொருட்கள் - கலெக்டர் தகவல்


காஞ்சீபுரம் மாவட்டத்தில் 14 ஆயிரத்து 145 பேருக்கு கொரோனா நிவாரண பொருட்கள் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 12 May 2020 10:30 PM GMT (Updated: 12 May 2020 10:05 PM GMT)

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 14 ஆயிரத்து 145 பேருக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தொற்று பரவாமல் தடுத்திட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வறுமையில் உள்ள தொழிலாளர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் போன்ற மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் நிவாரண பொருட்களாக வழங்கப்பட்டு வருகிறது.

14 ஆயிரத்து 145 பேருக்கு...

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 14 ஆயிரத்து 145 பேருக்கு கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story