திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் செவிலியர்களுக்கு ரோஜாப்பூ மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர்


திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் செவிலியர்களுக்கு ரோஜாப்பூ மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர்
x
தினத்தந்தி 13 May 2020 5:50 AM IST (Updated: 13 May 2020 5:50 AM IST)
t-max-icont-min-icon

செவிலியர் தினத்தை முன்னிட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் செவிலியர்களுக்கு ரோஜாப்பூ மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர்.

திருப்பத்தூர், 

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் 80-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் சுழற்சி முறையில் கொரோனா சிறப்பு வார்டில் பணிபுரிகின்றனர்.

செவிலியர் தினத்தை முன்னிட்டு கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக தங்கள் உயிரையும் துச்சமாக மதித்து தங்கள் குடும்பத்தினரையும், குழந்தைகளையும் மறந்து அங்கேயே பணிபுரிந்து வரும் அவர்களை பாராட்டும் விதமாக திருப்பத்தூர் பொதுமக்கள் அனைத்து செவிலியர்களுக்கும் ரோஜா பூ மாலை அணிவித்து, பூக்களை தூவி மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார்கள். அப்போது அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் திலீபன், டாக்டர்கள் வேல்முருகன், பிரபாகரன், சிவகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story