சேலம் குமாரசாமிபட்டியில் நிறைமாத கர்ப்பிணிகளுக்கு கொரோனா பரிசோதனை முகாம்


சேலம் குமாரசாமிபட்டியில் நிறைமாத கர்ப்பிணிகளுக்கு கொரோனா பரிசோதனை முகாம்
x
தினத்தந்தி 13 May 2020 9:58 AM IST (Updated: 13 May 2020 9:58 AM IST)
t-max-icont-min-icon

சேலம் குமாரசாமிபட்டியில் நிறைமாத கர்ப்பிணிகளுக்கு கொரோனா பரிசோதனை முகாம் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தொடங்கி வைத்தார்.

சேலம்,

கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு பணியாக, சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக பொது இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டு கொரோனா தடுப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று உள்ளதா? என்பதை பரிசோதனை செய்ய சிறப்பு முகாம் சேலம் குமாரசாமிபட்டி நகர்ப்புற சமுதாய சுகாதார நிலையத்தில் தொடங்கப்பட்டது. இதனை மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தொடங்கி வைத்தார்.

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 16 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் 11 ஆயிரம் கர்ப்பிணிகள் பதிவு செய்துள்ளனர் அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களில் நிறைமாத கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று நோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. பரிசோதனை செய்யப்பட்ட அனைவரும் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள் என மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலர் பார்த்திபன், மருத்துவ அலுவலர் கே.சரண்யா, தாய் சேய் நல அலுவலர் சுமதி மற்றும் சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story