சிறப்பு ரெயிலில் மேகாலயா செல்ல சென்னை புறப்பட்டு சென்ற 194 தொழிலாளர்கள்


சிறப்பு ரெயிலில் மேகாலயா செல்ல சென்னை புறப்பட்டு சென்ற 194 தொழிலாளர்கள்
x
தினத்தந்தி 14 May 2020 4:00 AM IST (Updated: 14 May 2020 2:05 AM IST)
t-max-icont-min-icon

சிறப்பு ரெயிலில் மேகாலயா செல்ல 194 தொழிலாளர்கள் சென்னை புறப்பட்டு சென்றனர்.

திருப்பூர், 

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொழில்நிறுவனங்களில் பணியாற்றி வந்த வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல இணையதளம் மூலமாக விண்ணப்பித்து காத்திருந்தனர். மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியில் ரெயில் மூலமாக அவர்கள் சொந்த ஊர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள். மேகாலயா, சிக்கிம், மிசோரம் பகுதிகளுக்கு சென்னையில் இருந்து ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அதனால் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பஸ் ஏற்பாடு செய்யப்பட்டு மேகாலயா, சிக்கிம், மிசோரம் பகுதி தொழிலாளர்களை சென்னைக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

அதன்படி நேற்று காலை திருப்பூர் மாவட்டத்தில் இருந்து மேகாலயா மாநிலத்தை சேர்ந்த 194 தொழிலாளர்கள் 6 பஸ்களில் சென்னைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மேகாலயா தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு அதன்பிறகு பஸ்களில் ஏற்றி சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் சென்னையில் இருந்து ரெயில் மூலமாக மேகாலயா செல்ல இருக்கிறார்கள். இதுபோல் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த வெளிமாநில தொழிலாளர்கள் திருப்பூரில் இருந்து பஸ் மூலமாக சென்னைக்கு அழைத்துச்செல்லப்பட்டு அங்கிருந்து ரெயில் மூலமாக அனுப்பி வைக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

Next Story