மாவட்ட செய்திகள்

சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக்கோரி விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தை வடமாநில தொழிலாளர்கள் முற்றுகை + "||" + Northern Territory workers blockade Varkathasalam taluk office to be sent home

சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக்கோரி விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தை வடமாநில தொழிலாளர்கள் முற்றுகை

சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக்கோரி விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தை வடமாநில தொழிலாளர்கள் முற்றுகை
சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக்கோரி விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தை வடமாநில தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.
விருத்தாசலம்,

விருத்தாசலம் பகுதியில் பீகார், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கியிருந்து பல்வேறு தொழில் களை செய்து வருகின்றனர். தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினால் இந்த தொழிலாளர்கள் அனைவரும் வேலையிழந்து வருமானமின்றி கஷ்டத்துக்கு உள்ளாகி இருக்கின்றனர். எனவே இவர்கள், தங்களை சொந்த மாநிலத்திற்கே அனுப்பி வைக்கும்படி விண்ணப்பித்திருந்தனர். ஆனால் அதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.


தாலுகா அலுவலகம் முற்றுகை

இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் நேற்று விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த தாசில்தார் கவியரசு, விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உங்களது விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டால் அரசு உடனடியாக உங்களுக்கு அனுமதி அளிக்கும். அதுவரை பொறுத்திருக்க வேண்டும் என தெரிவித்தனர். இதையேற்று அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

1. டாஸ்மாக்கடை திறக்க எதிர்ப்பு; கிராம மக்கள் முற்றுகை
டாஸ்மாக்கடை திறக்க எதிர்ப்பு; கிராம மக்கள் முற்றுகை.
2. ஆசிரியர்கள் மூலம் இலவச அரிசி வழங்க எதிர்ப்பு கலெக்டர் அலுவலகத்தை ரேஷன் கடை ஊழியர்கள் முற்றுகை
ஆசிரியர்கள் மூலம் இலவச அரிசி வழங்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை ரேஷன்கடை ஊழியர்கள் முற்றுகையிட்டனர்.
3. கடன் தவணை வசூலிக்க வந்த ஊழியர்களை மகளிர் குழுவினர் முற்றுகை
கடன் தவணை வசூலிக்க வந்த ஊழியர்களை மகளிர் குழுவினர் முற்றுகையிட்டனர்.
4. தோகைமலைக்கு வேலைக்கு வந்தமராட்டிய மாநில தொழிலாளர்கள் 19 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்
தோகைமலைக்கு வேலைக்கு வந்த மராட்டிய மாநில தொழிலாளர்கள் 19 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
5. அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்.