மாவட்ட செய்திகள்

சம்பளம் வழங்க கோரி உள்ளாட்சித்துறை அலுவலகத்தை நகராட்சி ஊழியர்கள் முற்றுகை + "||" + Municipal employees blockade local government office demanding pay

சம்பளம் வழங்க கோரி உள்ளாட்சித்துறை அலுவலகத்தை நகராட்சி ஊழியர்கள் முற்றுகை

சம்பளம் வழங்க கோரி உள்ளாட்சித்துறை அலுவலகத்தை நகராட்சி ஊழியர்கள் முற்றுகை
சம்பளம் வழங்க கோரி உள்ளாட்சித்துறை அலுவலகத்தை நகராட்சி ஊழியர்கள் முற்றுகை.
புதுச்சேரி,

புதுவை நகராட்சியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த மாதம் சம்பளம் வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து, அவர்கள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடாமல் கடந்த 4-ந் தேதி முதல் கம்பன் கலையரங்கம் முன்பு அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் போராட்டம் நேற்று 8-வது நாளாக நீடித்தது.


போராட்டத்தில் கலந்துகொண்ட 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள், உள்ளாட்சித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த உள்ளாட்சித்துறை இயக்குனர் மலர்கண்ணன், போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். நாளை (வெள்ளிக்கிழமை) சம்பளம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். இதையடுத்து நகராட்சி ஊழியர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துசென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. டாஸ்மாக்கடை திறக்க எதிர்ப்பு; கிராம மக்கள் முற்றுகை
டாஸ்மாக்கடை திறக்க எதிர்ப்பு; கிராம மக்கள் முற்றுகை.
2. ஆசிரியர்கள் மூலம் இலவச அரிசி வழங்க எதிர்ப்பு கலெக்டர் அலுவலகத்தை ரேஷன் கடை ஊழியர்கள் முற்றுகை
ஆசிரியர்கள் மூலம் இலவச அரிசி வழங்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை ரேஷன்கடை ஊழியர்கள் முற்றுகையிட்டனர்.
3. கடன் தவணை வசூலிக்க வந்த ஊழியர்களை மகளிர் குழுவினர் முற்றுகை
கடன் தவணை வசூலிக்க வந்த ஊழியர்களை மகளிர் குழுவினர் முற்றுகையிட்டனர்.
4. வாகனத்துக்கு இ-பாஸ் பெற்றுத்தரலஞ்சம் வாங்கிய கலெக்டர் அலுவலக ஊழியர்கள் 2 பேர் கைது
வாகனத்துக்கு இ-பாஸ் பெற்றுத்தர லஞ்சம் வாங்கிய கலெக்டர் அலுவலக ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
5. ரேஷன் கடைகள் மூலம் நிவாரண பொருட்கள் வழங்க கோரி நாகர்கோவிலில் கட்டுமான தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்
நாகர்கோவில் தொழிலாளர் துறை அலுவலகத்தை கட்டுமான தொழிலாளர்கள் திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.