மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடிய 39 பேர் கைது + "||" + 39 persons arrested in Krishnagiri district for money laundering

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடிய 39 பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடிய 39 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடிய 39 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்கீர்த்தி மற்றும் போலீசார் பழையபேட்டை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய அதேபகுதியை சேர்ந்த தனுஷ் (வயது 20), மேலேரிகொட்டாய் கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் (45), துரை (49), ஆம்பூரை சேர்ந்த கணேஷ் (20) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


இதேபோல் சூளகிரி பகுதியில் சூதாடியதாக சுரேஷ் (28), பழனி (27) ஆகியோரும், பேரிகை பகுதியை சேர்ந்த சந்திரபா (40), கிருஷ்ணப்பா (35), நரசிம்மராஜ் (38), சூடப்பா (46) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். சாமல்பட்டி பகுதியில் சசிகுமார் (24), சிதம்பரம் (39), கந்தன் (40) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கல்லாவி போலீசார் சந்தைதோப்பு கிராமத்தில் ரோந்து சென்ற போது அங்கு பணம் வைத்து சூதாடிய மோகன்ராஜ் (26), சரவணன் (30), முத்து (30) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

ராயக்கோட்டை-தேன்கனிக்கோட்டை

இதேபோல் ராயக்கோட்டை பகுதியில் சூதாடிய தியாகராஜ் (24), ரமேஷ் (30), சரவணன் (32), தங்கராஜ் (28), சேகர் (35), குமார் (35), குப்பன் (42), சின்னசாமி (43), திம்மப்பன் (28), கோபால் (27) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

தேன்கனிக்கோட்டை போலீசார் பிக்கனப்பள்ளி, மரக்கட்டா, தண்டரை உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய மல்லேஷ் (40), நாகேஷ் (34), தொட்டையா (38), ஆனந்தகுமார் (45), சேகர் (24), ரமேஷ் (38), மஞ்சுநாத் (27), அனில்குமார் (20), நரசிம்மா (24), நவீன்குமார் (24) ஆகிய 10 பேரையும் போலீசார் கைது செய்தனர். தேன்கனிக்கோட்டையில் சூதாடிய கோவிந்தராஜ் (40), ஹரி (35), நாகராஜ் (28) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்ட முழுவதும் பணம் வைத்து சூதாடியதாக 39 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. சாத்தான்குளம் தந்தை - மகன் மரணம் : போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யும் முகாந்திரம் உள்ளது- மதுரை ஐகோர்ட் கிளை
சாத்தான்குளம் சம்பவத்தில் போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யும் முகாந்திரம் உள்ளது என்று மதுரை ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது.
2. சீர்காழியில் படுகாயத்துடன் வீட்டில் பிணமாக கிடந்த ஓய்வு பெற்ற பெண் மருத்துவ அதிகாரி கொலையா? போலீசார் விசாரணை
சீர்காழியில் ஓய்வு பெற்ற பெண் மருத்துவ அதிகாரி வீட்டில் படுகாயத்துடன் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
3. வெளியூர்களில் இருந்து சரக்கு ஏற்றி வரும் வாகனங்கள், விழுப்புரம் நகருக்குள் வர தடை போலீசார் தீவிர சோதனை
வெளியூர்களில் இருந்து சரக்கு ஏற்றி வரும் வாகனங்கள் விழுப்புரம் நகருக்குள் வர போலீசார் தடை விதித்து தீவிர சோதனை செய்து வருகின்றனர்.
4. காரிமங்கலம் அருகே கட்டிட மேஸ்திரி வீட்டில் நகை, பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
காரிமங்கலம் அருகே கட்டிட மேஸ்திரி வீட்டில் கள்ளச்சாவி போட்டு மர்ம நபர்கள் 30 பவுன் நகை, ரூ.1 லட்சத்தை கொள்ளை அடித்து சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5. ஊரடங்கு உத்தரவை மீறிய ஆட்டோ டிரைவர்களுக்கு போலீசார் அறிவுரை
ஊரடங்கு உத்தரவை மீறிய ஆட்டோ டிரைவர்களுக்கு போலீசார் அறிவுரை.