வறண்ட கிருஷ்ணகிரி அணையில் மேய்ச்சலுக்காக விடப்பட்ட ஆடுகள்
வறண்டு போன கிருஷ்ணகிரி அணையில் மேய்ச்சலுக்காக ஆடுகள் விடப்பட்டன.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகள் பெருமளவில் உள்ளனர். அதில் ஆடு, மாடுகளை வளர்க்கும் விவசாயிகள் அதிகமாக உள்ளனர். இந்த ஆண்டு கடுமையாக வெயில் அடித்து வருவதாலும், பருவமழை பொய்த்து போனதாலும் ஏரிகள், குளங்கள் குட்டைகள் வற்றி காணப்படுகிறது.
வழக்கமாக கிருஷ்ணகிரி சுற்று வட்டார பகுதியில் விவசாயிகள் ஆடு, மாடுகளை ஓசூர், தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு மேய்ச்சலுக்காக கொண்டு செல்வார்கள். அந்த பகுதியில் பசுமையாக புல் இருப்பதால் அவ்வாறு கொண்டு செல்வதுண்டு.
ஆடுகள் மேய்கின்றன
இந்த நிலையில் தற்போது மாவட்டம் முழுவதும் வறட்சியால் நீரின்றி காணப்படுகிறது. இதனால் கிருஷ்ணகிரி அணை பின்புறத்தில் ஆடுகளை வளர்ப்பவர்கள், தங்களின் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்காக விட்டுள்ளார்கள்.
இது குறித்து ஆடு வளர்க்கும் விவசாயிகள் கூறுகையில், அணையின் பின்பகுதியில் புற்கள் சிறிய அளவில் வளர்ந்துள்ளன. ஆடுகளுக்கு குறைவான புற்கள் கிடைக்கின்றன. இருந்த போதிலும் வேறு இடத்திற்கு செல்ல முடியாததால் இந்த பகுதியிலேயே ஆடுகளை மேய விடுகிறோம், என்றனர்.

Related Tags :
Next Story