திருப்பூரில் தண்ணீர் லாரியில் கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது


திருப்பூரில் தண்ணீர் லாரியில் கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 16 May 2020 3:15 AM IST (Updated: 16 May 2020 1:48 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் தண்ணீர் லாரியில் கஞ்சா விற்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர், 

திருப்பூரில் தண்ணீர் லாரியில் கஞ்சா விற்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது-

திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் திருப்பூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த தண்ணீர் லாரியை நிறுத்தி சோதனை நடத்தினார்கள். அந்த லாரியில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து லாரி டிரைவரான கொடிகம்பம் பகுதியை சேர்ந்த சுந்தரமகாலிங்கத்தை(வயது 24) பிடித்தனர். லாரியில் இருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவருடைய நண்பர்களான கருமாரம்பாளையத்தை சேர்ந்த பாண்டிபிரபு(24), எம்.எஸ்.நகரை சேர்ந்த முகமது ஹனீஷ்(19) ஆகியோரும் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும்பிடித்து அவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இவர்கள் தண்ணீர் லாரியில் கஞ்சா வைத்துக்கொண்டு யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. பின்னர் சுந்தரமகாலிங்கம், பாண்டிபிரபு, முகமது ஹனீஷ் ஆகிய 3 பேர் மீது வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு தண்ணீர் லாரி, ஒரு ஸ்கூட்டர், ரூ.3 ஆயிரம், 5 கிலோ 250கிராம் கஞ்சா ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பேரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story