வேலூர் அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த 6 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்


வேலூர் அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த 6 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்
x
தினத்தந்தி 16 May 2020 5:59 AM IST (Updated: 16 May 2020 5:59 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தனி வார்டில் சிகிச்சை பெற்று வந்த 6 பேர், நேற்று பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.

அடுக்கம்பாறை, 

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு தனிவார்டு அமைக்கப்பட்டு உள்ளது. சுமார் 350 படுக்கைகள் கொண்ட இந்த வார்டில் மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் உள்ளனர். இங்கு தற்போது வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களைச் சேர்ந்த 30 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் வேலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தனி வார்டில் சிகிச்சை பெற்று வந்த 6 பேர், நேற்று பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இவர்களை கல்லூரி டீன் செல்வி, மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜவேலு, குடியிருப்பு மருத்துவ அலுவலர் இன்பராஜ் உள்ளிட்டோர் பழங்களை வழங்கி வழியனுப்பி வைத்தனர். மேலும் 24 பேர் சிகிச்சையில் இருப்பதாகவும், அவர்களும் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story