கண்களில் கருப்பு துணி கட்டி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் போராட்டம்


கண்களில் கருப்பு துணி கட்டி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 16 May 2020 8:35 AM IST (Updated: 16 May 2020 8:35 AM IST)
t-max-icont-min-icon

கண்களில் கருப்பு துணி கட்டி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் போராட்டம்.

புதுச்சேரி,

புதுவை பி.எஸ்.என்.எல். ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தினர் நிலுவை ஊதியம் வழங்கவேண்டும் என்று போராடி வருகின்றனர். அவர்கள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை புதுவை பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு சங்க தலைவர் குமார் தலைமை தாங்கினார். கொளஞ்சியப்பன் முன்னிலை வகித்தார். அவுட் சோர்சிங் திட்டத்தின் மூலம் ஒப்பந்த தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பக்கூடாது, ஒரு வருட நிலுவை சம்பளத்தை உடனே வழங்க வேண்டும், சம்பளம் குறைப்பு மற்றும் ஊழல் நடக்கும் அவுட்சோர்சிங் திட்டத்தை மத்திய அரசு கைவிடவேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

தொழிலாளர்கள் தங்களது கண்களில் கருப்பு துணி கட்டி நூதன முறையில் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட செயலாளர் சுப்பிரமணி, துணை தலைவர் முருகையன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story