பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 May 2020 10:41 AM IST (Updated: 16 May 2020 10:41 AM IST)
t-max-icont-min-icon

பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

மதுரை,

பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் மதுரை பீ.பி.குளத்தில் உள்ள பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் முருகேஷ் பாபு தலைமை தாங்கினார். பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மதுரை கோட்ட செயலாளர் செல்வின் சத்தியராஜ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ரிச்சர்ட் கண்டன உரையாற்றினார்.அப்போது ஊழியர்கள் கருப்பு துணியால் கண்களை கட்டிக் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவும் சமயத்தில் ஒப்பந்த ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யவதை கண்டித்தும், சம்பள நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்ட துணைத்தலைவர் குமார் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சமூக இடைவெளியினை பின்பற்றி நின்றனர்.

Next Story