அரியலூர் மாவட்டத்தில் பணிபுரிந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த 330 தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு
அரியலூர் மாவட்டத்தில் பணிபுரிந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த 330 தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அரியலூர்,
கொரோனா வைரஸ் தொடர்பாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எந்தவொரு போக்குவரத்தும் செயல்படாத காரணத்தினால் அரியலூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த 330 தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்கு விருப்பம் தெரிவித்திருந்தார்கள். அதனை தொடர்ந்து அந்த 330 பேரும் பீகார் மாநிலத்திற்கு செல்வதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ரூ.3 லட்சத்து 300 மதிப்பில், அவர்களுக்கு சிறப்பு ரெயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கிலிருந்து 14 வாகனங்கள் மூலம் 330 பேரையும் கலெக்டர் ரத்னா மதிய உணவுகள் வழங்கி, வழி அனுப்பி வைத்தார்.
அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் பாலாஜி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவிச்சந்திரன், தாசில்தார் சந்திரசேகரன் ஆகியோர் உடனிருந்தனர். அந்த வாகனங்களில் போலீசார், வருவாய்த்துறையினர் விழுப்புரம் ரெயில் நிலையத்துக்கு சென்று, அங்கிருந்து இரவு சிறப்பு ரெயிலில் 330 பேரையும் ஏற்றி வழியனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story