வளைகுடா நாடுகளில் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் தவிப்பு காணொலி காட்சி மூலம் நாராயணசாமி பேச்சு


வளைகுடா நாடுகளில் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் தவிப்பு காணொலி காட்சி மூலம் நாராயணசாமி பேச்சு
x
தினத்தந்தி 18 May 2020 7:52 AM IST (Updated: 18 May 2020 7:52 AM IST)
t-max-icont-min-icon

வளைகுடா நாடுகளில் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் தவிப்பு காணொலி காட்சி மூலம் நாராயணசாமி பேச்சு.

புதுச்சேரி,

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பஸ், ரெயில், விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் ஏராளமான தொழிலாளர்கள், மாணவர்கள் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களது விருப்பத்தின்பேரில் மத்திய அரசு விமானம் மூலம் இந்தியாவிற்கு அழைத்து வருகிறது.

பிரான்ஸ், வளைகுடா நாடுகளில் புதுவையை சேர்ந்த தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். அவர்கள் தங்களை புதுவைக்கு அரசு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து அவர்களிடம் தனது வீட்டில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று பேசினார்.

அப்போது அவர்கள் தங்களை விமானம் மூலம் புதுவைக்கு அழைத்துச் செல்ல மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். முதல்-அமைச்சரும் அதற்கான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Next Story