கூடங்குளம் அருகே நீரில் மூழ்கி இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு இன்பதுரை எம்.எல்.ஏ. ஆறுதல்
கூடங்குளம் அருகே நீரில் மூழ்கி இறந்த சிறுமியின் குடும்பத்தினரை இன்பதுரை எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
கூடங்குளம்,
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள திருவம்பலபுரத்தை அடுத்த தோட்டாவிளையை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவருடைய மகள் கீர்த்திகா (வயது 12). இவள் அப்பகுதியை சேர்ந்த 4 சிறுமிகளுடன், ஊருக்கு அருகில் உள்ள நம்பியாறு தடுப்பணையில் குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுமி கீர்த்திகா தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தாள். மற்ற 4 பேரும் தண்ணீரில் தத்தளித்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியினர், அவர்களை பத்திரமாக மீட்டனர். அதில் சிறுமி மகிபா கூடங்குளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாள்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், இன்பதுரை எம்.எல்.ஏ. கூடங்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று, தண்ணீரில் மூழ்கி பலியான சிறுமி கீர்த்திகாவின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். மேலும் ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கினார். மேலும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சிறுமி மகிபாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
Related Tags :
Next Story