கொரோனா பாதிப்பு: திண்டுக்கல்லில் சிகிச்சை பெற்ற 9 பேர் குணமடைந்தனர்


கொரோனா பாதிப்பு:  திண்டுக்கல்லில் சிகிச்சை பெற்ற 9 பேர் குணமடைந்தனர்
x
தினத்தந்தி 19 May 2020 5:22 AM IST (Updated: 19 May 2020 5:22 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 9 பேர் குணமடைந்தனர்.

திண்டுக்கல், 

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதித்த நபர்களின் எண்ணிக்கை நேற்றுடன் 126 ஆக உயர்ந்தது. அதேநேரம் நேற்று முன்தினம் வரை கொரோனா பாதிப்பில் இருந்து 97 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருந்தனர். ஒருவர் மட்டும் இறந்து விட்டார். இதற்கிடையே திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் சேவுகம்பட்டி, தெப்பத்துப்பட்டி, ஒட்டுபட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 9 பேர் நேற்று குணமடைந்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் வீடு திரும்பினர். மேலும் 14 நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ளும்படி டாக்டர்கள் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்தது. அதேநேரம் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று, குணமடைந்தவர்கள் வீடு திரும்புவது, இது முதல்முறையாகும். இதற்கு முன்பு கரூரில் சிகிச்சை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் 18 பேர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும், கர்ப்பிணி ஒருவர் மதுரை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story