தொண்டி அருகே சூறாவளியால் படகில் தவறி விழுந்த மீனவர் சாவு


தொண்டி அருகே  சூறாவளியால் படகில் தவறி விழுந்த மீனவர் சாவு
x
தினத்தந்தி 19 May 2020 11:05 AM IST (Updated: 19 May 2020 11:05 AM IST)
t-max-icont-min-icon

சூறாவளியால் படகில் தவறி விழுந்த மீனவர் பரிதாபமாக இறந்தார்.

தொண்டி, 

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள நம்புதாளை படையாச்சி தெருவை சேர்ந்தவர் தங்கமுனீஷ் (வயது 25). மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தார். திருமணம் ஆகாதவர்.

நேற்று முன்தினம் இரவு நம்புதாளையில் பலத்த காற்று, இடியுடன் மழை பெய்தது. இதையடுத்து இவருக்கு சொந்தமான படகு காற்றில் அடித்து சென்று விடாமல் இருக்க படகை நங்கூரம் போட்டு கட்டும் பணியில் ஈடுபட்டார்.

அப்போது எதிர்பாராதவிதமாக படகில் இருந்து தவறி விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் படகிலேயே இறந்து கிடந்தார். நேற்று அதிகாலை அவருடைய தந்தை ராஜ், தன் மகனை காணாமல் பல இடங்களில் தேடினார்.

பிணமாக கிடந்தார்

பின்னர் படகிற்கு சென்று பார்த்தார். அப்போது படகில் தங்கமுனீஷ் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இதுகுறித்து தேவிபட்டினம் கடலோர போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதனை தொடர்ந்து அங்கு வந்த போலீசார், தங்கமுனீஸ் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் நம்பு ராஜேஷ் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Next Story