இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சேலம் டவுன் ரெயில் நிலையம் அருகே நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் மோகன் தலைமை தாங்கினார்.
சேலம்,
ஊரடங்கு உத்தரவையொட்டி அரசு ஒரு குடும்பத்துக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும், வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களை பாதுகாப்பாக அனுப்பி வைக்க வேண்டும், விவசாய பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டவர்கள் கருப்புக்கொடி ஏந்தி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் 60 இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
Related Tags :
Next Story