இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 May 2020 7:45 AM IST (Updated: 20 May 2020 7:45 AM IST)
t-max-icont-min-icon

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கள்ளக்குறிச்சி அருகே கீழ்நாரியப்பனூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.


கள்ளக்குறிச்சி,

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட கூலி தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், சிறு, குறு விவசாயிகளின் பயிர்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கள்ளக்குறிச்சி அருகே கீழ்நாரியப்பனூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

இதற்கு வட்ட செயலாளர் அப்பாவு தலைமை தாங்கினார். இதில் முனியபிள்ளை, சுப்பிரமணியன், ரீட்டா கனகராஜ், கருணாநிதி, குட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கையில் கருப்பு கொடி ஏந்தி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதேபோல் விளம்பார் உள்பட மேலும் 9 இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Next Story