உள்ளாட்சி தேர்தல் முன்விரோதத்தில் இருதரப்பினர் மோதல்; 12 பேர் கைது


உள்ளாட்சி தேர்தல் முன்விரோதத்தில் இருதரப்பினர் மோதல்; 12 பேர் கைது
x
தினத்தந்தி 20 May 2020 9:48 AM IST (Updated: 20 May 2020 9:48 AM IST)
t-max-icont-min-icon

கம்மாபுரம் அருகே உள்ளாட்சி தேர்தல் முன்விரோதத்தில் இருதரப்பினர் மோதிக்கொண்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

கம்மாபுரம், 

கடலூர் மாவட்டம் கம்மாபுரம் அடுத்த தர்மநல்லூரில் தேர்தல் முன்விரோதம் தொடர்பாக இருதரப்பினர் இடையே நேற்று மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்பினரும் கற்கள், உருட்டு கட்டை போன்றவற்றை கொண்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் அந்த பகுதியே கலவர பூமி போன்று காட்சியளித்தது. இதுபற்றி அறிந்த கம்மாபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பிலும் தனிதனியாக போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்படி, சக்திவேல் மகன் பாலமுருகன்(வயது 28) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வினோத் குமார், திருவெங்கடம் மகன்கள் மகேஷ் (30), திருகுமரன் (31), இளவரசன் (33), ராஜேந்திரன் (58), வீரபாண்டியன், செந்தமிழ்ச்செல்வன் (25), நித்தியானந்தம், பாலு (42) உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து மகேஷ், திருகுமரன், இளவரசன், ராஜேந்திரன், செந்தமிழ்ச்செல்வன், பாலு ஆகிய 6 பேரை கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

இதேபோன்று, வினோத் குமார் கொடுத்த புகாரின் பேரில் பாலமுருகன் (28), குமார் (55), அன்பழகன் (54), ரகுபதி (31), சீனிவாசன் (39), தணிகாசலம் (58), ராஜேஷ், ஆறுமுகம், திருநாவுக்கரசு ஆகிய 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து பாலமுருகன், குமார், அன்பழகன், ரகுபதி, சீனிவாசன், தணிகாசலம் ஆகிய 6 பேரை கைது செய்தனர். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இருதரப்பினரும் கல் மற்றும் கட்டைகளால் மோதிக்கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். இதனிடையே அந்த பகுதியில் மேற்கொண்டு அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் தடுக்கும் வகையில் விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் அப்பகுதியில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

Next Story