திருமழிசையில் கட்டப்பட உள்ள புதிய பஸ் முனைய பணிகள் குறித்து ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை


திருமழிசையில் கட்டப்பட உள்ள புதிய பஸ் முனைய பணிகள் குறித்து ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை
x
தினத்தந்தி 21 May 2020 11:45 PM GMT (Updated: 21 May 2020 7:32 PM GMT)

திருமழிசையில் கட்டப்பட உள்ள புதிய பஸ் முனைய பணிகள் குறித்து ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.

சென்னை, 

சென்னையை அடுத்த திருமழிசையில் புதிய பஸ் முனையம் கட்டப்பட உள்ளது. இந்த புதிய பஸ் முனையத்திற்கான திட்டப் பணிகள் மற்றும் வடிவமைப்பு குறித்த ஆய்வு கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள சென்னை பெருநகர வளர்ச்சி குழும அலுவலக கூட்ட அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் முதன்மை செயலாளர் ராஜேஷ் லக்கானி, சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர் த.கார்த்திகேயன், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் பா.முருகேஷ் மற்றும் திருமழிசையில் கட்டப்பட உள்ள புதிய பஸ் முனையத்திற்கான திட்டம் மற்றும் வடிவமைப்பு திட்ட ஆலோசகர் சி.ஆர்.நாராயண ராவ் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பஸ் முனைய பணிகள் தொடங்குவதற்கான ஆயத்த பணிகளை துரிதப்படுத்துமாறு ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தினார்.

Next Story