திருப்பத்தூர் நகர அ.தி.மு.க. சார்பில் 1,000 பேருக்கு மளிகை பொருட்கள் - அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்


திருப்பத்தூர் நகர அ.தி.மு.க. சார்பில் 1,000 பேருக்கு மளிகை பொருட்கள் - அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்
x
தினத்தந்தி 22 May 2020 12:05 AM GMT (Updated: 2020-05-22T05:35:34+05:30)

திருப்பத்தூர் நகர அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் கே.சி.வீரமணி 1,000 பேருக்கு மளிகை பொருட்கள் வழங்கினார்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் நகர அ.தி.மு.க. சார்பில் 26-வது வார்டு காமராஜர் நகரை சேர்ந்த 1000 பேருக்கு ரூ.1,200 மதிப்புள்ள அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை மாவு மற்றும் காய்கறிகள் தொகுப்பு அடங்கிய பை வழங்கும் நிகழ்ச்சி காமராஜர் நகரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் டி.டி.குமார் தலைமை தாங்கினார். அ.தி.மு.க.மாவட்ட இளைஞரணி செயலாளர் தம்பா கிருஷ்ணன், அவைத் தலைவர் ஆர்.ரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரதிநிதி ரவி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் ஆகியோர் கலந்து கொண்டு, 1000 பேருக்கு ரூ.1,200 மதிப்புள்ள அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை மாவு, காய்கறி உள்ளிட்டவை அடங்கிய தொகுப்பு பைகளை வழங்கி பேசினர். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் டாக்டர் சுப்பிரமணியம், கூட்டுறவு சங்க தலைவர் கே.எம்.சுப்ரமணியம், டி.டி.சி.சங்கர், ஆர்.நாகேந்திரன், வீடியோ சரவணன், சந்திரமோகன், எஸ்.எம்.எஸ்.சதீஷ், தாஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கே.துரை சாந்தி, கே.ஜெயக்குமார். கீதா, கே.தட்சிணாமூர்த்தி, டி.கோபாலகிருஷ்ணன், டாக்டர் ஜெ.விக்னேஷ்குமார், டி.ஆனந்தகிருஷ்ணன், ஜெ.சந்தோஷ்குமார், ஜெ.ஸ்வேதா ஆகியோர் செய்திருந்தனர்.

Next Story