மின்வாரியம் தனியார் மயமாக்குவதை கண்டித்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மின்வாரியம் தனியார் மயமாக்குவதை கண்டித்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புளியங்குடி,
மின்வாரியம் தனியார் மயமாக்குவதை கண்டித்து கடையநல்லூர் கோட்டம் புளியங்குடி துணை மின்நிலைய அலுவலகத்தின் முன்பு அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு சங்க நிர்வாகி ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பன்னீர் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சங்க பொறுப்பாளர்கள் கலைசெல்வம், கல்யானசுந்தரம், காளிமுத்து, அய்யப்பன், ராஜகோபால், மதி, கண்ணண், பழனியம்மாள், முருகேசன் உள்பட பலர் கலந்து கொன்டனர். மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில் கோரிக்கையை விளக்கி ராஜசேகரன், பழனிசாமி ஆகியோர் பேசினர்.
தென்காசியில் மின்வாரிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு மாவட்ட துணை செயலாளர் அயூப்கான் தலைமை தாங்கினார். தொழிலாளர் முன்னேற்ற சங்க கோட்ட செயலாளர் பெத்தேல் ராஜ், சம்மேளன கோட்ட செயலாளர் முருகன், டாக்டர் அம்பேத்கர் பணியாளர் மற்றும் பொறியாளர் சங்க மாநில இணைச் செயலாளர் அப்துல்காதர் மற்றும் தொழிற்சங்கத்தை சேர்ந்த மாரிமுத்து, டேவிட், முத்துப்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story