தொழிலாளர்கள் நிவாரணம் பெற தபால் நிலையத்தில் வங்கி கணக்கு தொடங்க நாளை கடைசி நாள்
தேனி மாவட்டத்தில் தொழிலாளர்கள் நிவாரணம் பெற தபால் நிலையத்தில் வங்கி கணக்கு தொடங்க நாளை கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனி,
தேனி தபால் கோட்ட கண்காணிப்பாளர் ஆனந்தி கூறியதாவது:-
தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து அமைப்பு சாரா தொழிலார்களுக்கும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.2 ஆயிரம் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. தொழிலாளர் நல வாரியத்தில் வங்கி கணக்கு விவரங்களை இதுவரை கொடுக்காத அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவரும் அருகில் உள்ள தபால் கிளையை அணுகி ‘இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ்’ வங்கி கணக்கை உடனடியாக தொடங்கி பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அவ்வாறு வங்கி கணக்கு தொடங்குவதற்கு நாளை (சனிக்கிழமை) கடைசி நாள் ஆகும். எனவே, இதுவரை வங்கி கணக்கு தொடங்காத தொழிலாளர்கள் ஆதார் எண், செல்போன் எண், தொழிலாளர் நல வாரிய அடையாள அட்டை ஆகியவற்றை கொண்டு அருகில் உள்ள தபால் அலுவலகத்தில் கட்டணம் எதுவுமின்றி வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறலாம். ஏற்கனவே வங்கி கணக்கு விவரங்களை நல வாரிய அலுவலகத்தில் சமர்ப்பித்தவர்களுக்கு இந்த சேவை பயன்பெறாது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story