கொரோனா பரவல் தாக்கம் குறைய வேண்டி நெருப்பு வளையம் அமைத்து சித்தர் தவபூஜை


கொரோனா பரவல் தாக்கம் குறைய வேண்டி நெருப்பு வளையம் அமைத்து சித்தர் தவபூஜை
x
தினத்தந்தி 23 May 2020 4:00 AM IST (Updated: 22 May 2020 11:47 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவல் தாக்கம் குறைய வேண்டி பூமிக்குள் உடலை புதைத்து நெருப்பு வளையம் வைத்து சித்தர் தவபூஜை நடத்தினார்.

தூத்துக்குடி, 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் உலக நன்மை வேண்டியும், கொரோனா வைரஸ் பரவல் தாக்கம் குறைய வேண்டியும், நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்கள் சமநிலை அடைய வேண்டியும், தூத்துக்குடி அருகே உள்ள பிரத்தியங்கிரா தேவி, காலபைரவர் சித்தர் பீடத்தில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஆலய நிர்வாகி சீனிவாச சித்தர் நேற்று காலை 6 மணி முதல் தனது உடலை பூமிக்குள் புதைத்துக் கொண்டு, சுற்றி நெருப்பு வளையம் அமைத்து அஷ்டகாளிகளை வேண்டி தவபூஜை நடத்தினார். பூஜையில் பக்தர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. சித்தர் மட்டும் தனிமையில் பூஜையை நடத்தினார்.

இதுகுறித்து சீனிவாச சித்தர் கூறும்போது, “பஞ்ச பூதங்கள் சமநிலையில் இருந்தால் எந்தவித நோயும் பரவாது. இதனால் சித்தர்கள் உடலை பூமிக்குள் புதைத்து நெருப்பு வளையம் வைத்து வேண்டுதல் நடத்துவது வழக்கம். அதன்படி பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தில் தவபூஜை நடத்தப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா வைரசின் தாக்கம் விரைவில் குறையும்” என்றார்.

Next Story