சுங்குவார்சத்திரம் அருகே லாரி டிரைவரை கத்தியால் வெட்டி வழிப்பறி - 3 பேர் கைது
சுங்குவார்சத்திரம் அருகே லாரி டிரைவரை கத்தியால் வெட்டி வழிப்பறி செய்தது தொடபாக 3 பேர் கைது ட்ர்ய்யப்பட்டுள்ளன்
ஸ்ரீபெரும்புதூர்,
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த புள்ளூர் கிராமத்தைச் சேந்தவர் அன்பு(வயது 45). லாரி டிரைவர். இவர், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுங்குவார்சத்திரம் அருகே சாலை ஓரமாக லாரியை நிறுத்திவிட்டு அதில் படுத்து தூங்கினார். நள்ளிரவில் அங்கு வந்த 3 பேர் லாரி டிரைவர் அன்புவை கத்தியால் தலை, கை உள்ளிட்ட இடங்களில் வெட்டி விட்டு அவரிடம் இருந்த செல்போன், ரூ.3 ஆயிரத்தை பறித்துச் சென்றனர்.
இதுபற்றி சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் தொடர்பாக பாபு(24), விமல்(20), சென்னை பூக்கடை பகுதியைச் சேர்ந்த செல்வம் என்ற நிலா(21) ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து செல்போன், ரூ.3 ஆயிரம், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story